உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சியுடன் ஊராட்சிகள்: அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நகராட்சியுடன் ஊராட்சிகள்: அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை : உடுமலை நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை நகராட்சியுடன், அருகிலுள்ள போடிபட்டி, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க அரசு உத்தரவிட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், ஊராட்சிகளை இணைத்தால், வரிகள் உயரும், நுாறு நாள் வேலை நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், தமிழக அரசு, நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கூடாது என, ஐக்கிய கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் சார்பில், நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் தெய்வகுமார் நிர்வாகிகள் நாகராஜ், அப்பாஸ், ராஜா, செல்வம், தமிழர் பண்பாட்டு பேரவை தலைவர் பால்நாராயணன். இந்து சாம்ராஜ்யம் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை