உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகளை சேதப்படுத்திய யானைகளால் பரபரப்பு

வீடுகளை சேதப்படுத்திய யானைகளால் பரபரப்பு

வால்பாறை;வீடுகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட சென்ற தொழிலாளர்களை, யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன். இங்குள்ள சூடப்பாடி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு யானைகள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொண்டன.அதன்பின், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் மூன்று வீடுகளை சேதப்படுத்தின. தகவல் அறிந்த சக தொழிலாளர்கள் திரண்டு சென்று, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, தொழிலாளர்களை யானை விரட்டியதால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின், வனத்துறை ஊழியர்கள் வந்து, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ