| ADDED : ஜன 28, 2024 11:16 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.பூசாரிப்பட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் அனைத்து துறைகளின் சார்பில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடந்தது.ஹயக்கிரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கண்ணன் பேசினார். வணிகம் மற்றும் வங்கி நிதியியல் துறை உதவி பேராசிரியர் பவித்ரா வரவேற்றார்.பொள்ளாச்சி எஸ்.ஏ.எஸ்., அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் பால்சந்தர் பேசுகையில், ''மாணவர்கள் எதிர்கால உலகின் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, தங்களின் வேலைவாய்ப்பு திறன்களையும், வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுவே வெற்றி அடைவதற்கான வழியாகும்,'' என்றார்.தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், செயலர், இணைச் செயலர், பொருளாளர் பதவிகளுக்கான நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.