உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ்களில் கப் அடிக்குது; முகம் சுளிக்கும் பயணியர்

அரசு பஸ்களில் கப் அடிக்குது; முகம் சுளிக்கும் பயணியர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படும் அதிகப்படியான அரசு பஸ்கள், சரிவர சுத்தம் செய்யப்படாததால், அழுக்கு படிந்து, துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில் இருந்து, பொள்ளாச்சி மார்க்கமாக, அதிகப்படியான அரசு பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. 'டிரிப்' முடித்து பணிமனையில் நிறுத்தப்படும் பஸ்களை, சுழற்சி அடிப்படையில் 2, 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்.வெளியே நிறுத்தப்படும் பஸ்கள், வாரம் ஒரு முறை, சுத்தம் செய்வதற்காக பணிமனை எடுத்து வர வேண்டும். ஒரு பஸ்சுக்கு 3 முதல் 5 பேர் இருந்தால் மட்டுமே, ஓரளவு துாய்மையாகும்.ஆனால், பெரும்பாலான பணிமனைகளில், அதிகபட்சம் இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். ஒரு பஸ் துாய்மை பணிக்கு, 40 ரூபாய் மட்டுமே சம்பளம் தருவதால், அவர்களும் பெயரளவுக்கு மட்டுமே சுத்தம் செய்கின்றனர்.பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது:அரசு பஸ்களில், பலதரப்பட்ட மக்கள், பல்வேறு விதமான பொருட்களுடன் பயணிக்கின்றனர். சிலர் தின்பண்டங்கள் சாப்பிட்டு, கழிவுகளை பஸ் உள்ளேயே போடுகின்றனர்.குப்பை சேர்ந்து, துர்நாற்றம் வீசுகிறது. சிலர், எச்சில் துப்புதல், வாந்தி எடுத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவதால், பிற பயணியரை முகம் சுளிக்க வைக்கிறது. பஸ்சில் படிந்துள்ள அழுக்கு, இருக்கைகளை பார்த்து, பலர் தனியார் பஸ்களை நாடுகின்றனர்.சரிவர சுத்தம் செய்யாத பஸ்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போதிய ஊழியர்களை நியமித்து, பஸ்களை சுத்தம் செய்ய போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை