உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் வினியோகம் சீரானதால் நிம்மதி

தண்ணீர் வினியோகம் சீரானதால் நிம்மதி

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களுக்கு, கீழ் நிலை தொட்டி வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நீர் தேக்க தொட்டி ஊராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது.மேலும், இங்குள்ள மோட்டார் பழுதடைந்த நிலையில் இருந்ததால் தண்ணீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, மோட்டாரில் பழுதடைந்த உபகரணங்களை உடனடியாக சீரமைப்பு செய்து, தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், பொதுமக்களுக்கு வினியோகம் சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ