உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அணிவகுக்கும் மயில்கள்; கவலையில் விவசாயிகள்

அணிவகுக்கும் மயில்கள்; கவலையில் விவசாயிகள்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், விளைநிலங்களுக்கு படையெடுக்கும் மயில்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், புதர்கள் மற்றும் மலைப்பகுதிகளில், மயில்கள் அதிகம் இருந்தன. சமீப காலமாக, புதர்கள் அழிக்கப்பட்டு வருவதால், வாழ்விடங்களை இழந்த மயில்கள், விவசாய விளை நிலங்களில் தஞ்சமடைந்துள்ளன.விளைநிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர், மக்காச்சோளம், கீரை, தானியங்கள், காய்கறி பயிர்களை மயில்கள் உட்கொள்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். மயில்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாததால், விரக்தியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:விவசாய பயிர்களை, காட்டுப்பன்றிகள், மயிர்கள் அதிகளவில் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும்.விளைநிலங்களுக்குள் சுற்றித்திரியும் மயில்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பின்றி, அவற்றை பாதுகாக்க, வன உயிரின ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகளோடு ஆலோசித்து தீர்வை காண வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை