உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் குறுக்கு விசாரணை மனு

மீண்டும் குறுக்கு விசாரணை மனு

கோவை:கோவை, சிங்காநல்லுாரில் வசித்து வருபவர் பொங்கலுார் பழனிச்சாமி. 2006- 2011ல் தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அரசு தரப்பு வக்கீல் வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து எதிர்தரப்பு வக்கீல் வாதிட வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, எதிர் தரப்பு வக்கீல் அருள்மொழி தாக்கல் செய்த மனுவில், ''வழக்கு விசாரணை அதிகாரியான அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியாவிடம் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளிக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டு இருந்தார். அரசு தரப்பில் பதில் அளிக்க, வரும் 23க்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை