உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  முதல் ஸ்டார்ட் அப் கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு

 முதல் ஸ்டார்ட் அப் கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு

அன்னுார்: தமிழக அரசின் கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தில் முதல் 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம் பாளையம் தேர்வு செய்யப்பட்டு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசு, 'கிராமம் தோறும் புத் தொழில்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முன்னோடி மற்றும் முதல் கிராமமாக கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே உள்ள பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு இதன் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை செயலாளர் யசோதா தேவி வரவேற்று பேசுகையில், ''இங்கு உள்ள தொழில்நுட்ப பூங்காவில் கிராமப்புற பெண்கள் 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக தொழில் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதில் 300 பேர் தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளனர்,'' என்றார். இதில் 'ஸ்டார்ட் அப் டிஎன்' அமைப்பின் துணைத் தலைவர் சிவக்குமார் பேசுகையில், ''தமிழகத்தில் 100 தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் முதல் முன்னோடி கிராமமாக பிள்ளைப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திறன் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மானியம் வழங்கப்படும்,'' என்றார். கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே,'ஸ்டார்ட் அப் டி என்' திட்ட ஆலோசகர் வெங்கடேஸ்வரி, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்