2 சிறு தேர்வு, 5 மாதிரி தேர்வு வாரந்தோறும் நடத்த திட்டம்
கோவை: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், இலக்கிய திறனறித் தேர்வு அக்., 10ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட உள்ளது. கல்வி அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சூலுார், எஸ்.எஸ்.குளம், பேரூர் உட்பட, 15 ஒன்றியங்களிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். மாவட்டத்தில் இருந்து 500 மாணவர்கள் தேர்வில் பங்கேற்பர். இதற்கான பயிற்சி வகுப்பு, ஜூலை முதல் நடந்து வருகிறது. ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெற்றி பெறும் வகையில், மாவட்ட அளவில் தனிப்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு இரண்டு சிறு தேர்வு, ஐந்து மாதிரி தேர்வு நடத்த உள்ளோம். வினாத்தாள்கள் அந்தந்த பொறுப்பு ஆசிரியர்களுக்கு 'வாட்ஸ் அப்' மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.