உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை துாக்குங்க...ப்ளீஸ்! ஹவுசிங் யூனிட் பொதுமக்கள் முறையீடு

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை துாக்குங்க...ப்ளீஸ்! ஹவுசிங் யூனிட் பொதுமக்கள் முறையீடு

கோவை; கோவை மாநகராட்சியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர். மொத்தம், 46 மனுக்கள் பெறப்பட்டன.அதில், கவுண்டம்பாளையம் அரசு அலுவலர் குடியிருப்பில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் கொடுத்த மனுவில், 'மேட்டுப்பாளையம் ரோடு ஹவுசிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஹவுசிங் யூனிட் குடியிருப்புக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில், 25க்கும் மேற்பட்ட கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. துரித உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், மண் பானை கடைகள், பால் பூத்கள் நடத்தப்படுகின்றன.'வாகனங்களில் வருவோர் ரோட்டில் நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நுழைவாயிலை மறித்து பால் வேன் நிறுத்தப்படுகிறது. கடந்தாண்டு நவ., மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தற்போது மீண்டும் அக்கடைகள் செயல்பட ஆரம்பித்து விட்டன. சாலை விபத்துக்ளை தவிர்க்கவும், குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும்' என கோரியுள்ளார்.97வது வார்டு பிஸ்மி காலனி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'தண்ணீர் வந்து, 10 நாளாகி விட்டது. சாலை, சாக்கடை வசதி, தெருவிளக்கு மற்றும் தெருநாய் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என முறையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை