உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை திருட்டு; போலீசார் விசாரணை

நகை திருட்டு; போலீசார் விசாரணை

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பூட்டை உடைத்து தங்க நகைகள், இருசக்கர வாகனம் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் ஸ்ரீநாத், 38; ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறார். குடும்பத்துடன் வெளியூர் சென்றவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று தங்க காசுகள், ஒரு ஜோடி தங்க கம்மல், தங்க மோதிரம், வெள்ளி கிண்ணம் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியன திருட்டுப் போய் இருந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை