உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் கைது

பொள்ளாச்சி அருகே உள்ள, பொங்காளியூரை சேர்ந்தவர் ஜெகதீஷ், 45, கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துமாணிக்கத்தின் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். தோட்டத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அப்பகுதி வி.ஏ.ஓ., முத்துமாரி, 37, என்பவருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியை வி.ஏ.ஓ., அளவீடு செய்துள்ளார். அப்போது, தகாத வார்த்தைகளால் திட்டி வி.ஏ.ஓ.,வை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும், இனிமேல் இங்கு கால் வைத்தால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீசை கைது செய்தனர்.

விபத்தில் ஒருவர் காயம்

கிணத்துக்கடவு, சிங்கையன்புதுாரை சேர்ந்தவர் ரங்கசாமி, 40. மற்றும் திருநெல்வேலியை சேர்ந்தவர் செந்தில்குமார், 43. இவர்கள் இருவரும் சொக்கனுார் ரோட்டில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே பைக்கில் செல்லும் போது, எதிரே பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி பைக்கின் மீது மோதியது. இந்த விபத்தில், காயமடைந்த செந்தில்குமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடன் தொல்லையால் தற்கொலை

பொள்ளாச்சி அடுத்த, சிங்காநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ், 35. தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர், 8 ஆண்டுகளுக்கு முன், ராஜாமில்ரோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம், 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டிப் பணத்தை கட்டி வந்த நிலையில், இன்னும், 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டும் என, கிருஷ்ணகுமார் கூறியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த வரதராஜ், சாணிப்பவுடர் கரைசல் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் மனைவி நிவேதா கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிந்து, கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை