| ADDED : ஜன 12, 2024 12:20 AM
புகையிலை பொருள் விற்பனை
பரமக்குடியை சேர்ந்தவர் வர்கீஸ்கான், 26. இவர், முள்ளுப்பாடியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் கடையில் சோதனை செய்த போது, சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விபத்தில் பெண் காயம்
வால்பாறையை சேர்ந்தவர் நிர்மலா, 34. இவர், தனியார் பஸ்சில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். கிணத்துக்கடவு தீயணைப்பு அலுவலகம் அருகே பஸ் சென்ற போது, பஸ்சின் முன் சென்ற சரக்கு வாகனத்தில் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பஸ்சில் பயணம் செய்த நிர்மலாவுக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பஸ் ஓட்டுநர் மீது புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.