மது விற்ற மூவர் கைது
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சிங்கையன்புதுார் கல்லுக்குழி அருகே, 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, கரியாம்பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமாரை கைது செய்தனர்.இதே போன்று கிணத்துக்கடவு ஆர்.எஸ்., ரோடு அருகே, 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அரசம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரையும், வடபுதுார் பகுதியில் 8 மதுபாடல்களை பறிமுதல் செய்து, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரையும் கைது செய்தனர். மது விற்றதாக மூன்று பேரை கைது செய்து, மொத்தம், 23 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை விற்றவர் கைது
கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில், சிவகங்கையை சேர்ந்த கண்ணன், 40, என்பவரது பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கடையில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது உறுதியானதை தொடர்ந்து, 58 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கண்ணனை போலீசார் கைது செய்தனர்.