உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சியினர் அனுசரிப்பு

 அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சியினர் அனுசரிப்பு

பொள்ளாச்சி: அம்பேத்கரின், 69வது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பொள்ளாச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில், அரசியலமைப்பை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின், 69வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.எல்.ஏ. ஜெயராமன் தலைமை வகித்து, அம்பேத்கரின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். * தெற்கு நகர தி.மு.க சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி முன்னிலை வகித்தார்.எம்.பி. ஈஸ்வரசாமி, அம்பேத்கர் திருவுருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். சட்ட திட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், நகராட்சி தலைவர் சியாமளா, துணைத்தலைவர் கவுதமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். * வடக்கு நகர தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் மற்றும் எம்.பி. தலைமை வகித்தனர். வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். * கோவை தெற்கு மாவட்ட காங். கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு தினம், கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்து, மலர் அஞ்சலி செலுத்தினார். * வால்பாறையில், பா.ஜ., சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் காந்திசிலை வளாகத்தில் நடந்தது. மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில், அம்பேத்கர் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ