உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஐ.டி., கல்லுாரியில் பொங்கல் விழா சிறப்பு

கே.ஐ.டி., கல்லுாரியில் பொங்கல் விழா சிறப்பு

கோவை;கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, கல்லுாரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து தலைமை வகித்தனர்.கண்ணம்பாளையம் பேரூராட்சித்தலைவர் புஷ்பலதா,துணைத் தலைவர் சண்முகம், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து, சமத்துவ பொங்கல் வைத்தனர். கரகாட்டம், பொய்க்கால் குதிரை,வள்ளி கும்மி ஆட்டம் ஆகிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ