தமிழகத்தில் சர்க்கரை அட்டை வைத்திருக்கும் ஏழை மக்களுக்கும், பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று, கோரிக்கை எழுந்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய், இந்த ஆண்டில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டை மற்றும் வெள்ளை அட்டை வைத்திருப்போருக்கு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.ஆனால் சர்க்கரை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும், இந்த பொங்கல் பரிசு கிடையாது என்று அறிவித்து இருப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.2021 பொங்கலின் போது, கொரோனா பாதிப்புகள் மற்றும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், அரிசி அட்டையாக மாற்றும் வாய்ப்பும் வழங்கப்பட்டு, அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இருப்பினும், அதற்கு விண்ணப்பித்த பல ஆயிரம் பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இப்போதும் ஏழை மக்களில் பலர், சர்க்கரை அட்டை வைத்துள்ளனர்.டீக்கடை நடத்துவோர், கேன்களில் டீ விற்போர், இனிப்புப் பலகாரம் செய்து விற்பவர்கள் உள்ளிட்ட ஏழை மக்கள் பலரும், தங்களின் தொழில் தேவைக்கு வேண்டுமென்று, சர்க்கரை அட்டை வாங்கியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள், மிகவும் கஷ்டப்படும் ஏழை மக்களாவர். அதே நேரத்தில், அரிசி அட்டை வைத்துள்ள பலரும் வருமான வரியும் செலுத்தாமல், வசதி படைத்தவர்களாக உள்ளனர்.அரிசி அட்டை வைத்துள்ள ஒரே காரணத்தால், இவர்களுக்கும் பொங்கல் பரிசு உள்ளிட்ட பல விதமான, அரசு சலுகைகள் கிடைக்கின்றன.சர்க்கரை அட்டை வாங்கிய ஒரே காரணத்தால், ஏழைகள் பலரும் இவற்றை வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர். எனவே, இவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதற்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்கி, பொங்கல் பரிசு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, முதல்வருக்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.2021 பொங்கலுக்கு முந்தைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது போல, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றும் வாய்ப்பை, மீண்டும் ஏற்படுத்தவும் பலர் வலியுறுத்துகின்றனர்.இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தரும் அரசு, இந்த ஏழை மக்களின் எதிர்பார்ப்பையும், கோரிக்கையையும் உடனே பரிசீலிப்பது அவசியம்.உண்மையில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், அதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைக்குமென்பது நிச்சயம்.டீக்கடை நடத்துவோர், கேன்களில் டீ விற்போர், இனிப்புப் பலகாரம் செய்து விற்பவர்கள் உள்ளிட்ட ஏழை மக்கள் பலரும், தங்களின் தொழில் தேவைக்கு வேண்டுமென்று, சர்க்கரை அட்டை வாங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், மிகவும் கஷ்டப்படும் ஏழை மக்களாவர். அதே நேரத்தில், அரிசி அட்டை வைத்துள்ள பலரும் வருமான வரியும் செலுத்தாமல், வசதி படைத்தவர்களாக உள்ளனர்.-நமது நிருபர்-