உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காணும் பொங்கல் விழாவில் பொங்கலிட்டு கொண்டாட்டம்

காணும் பொங்கல் விழாவில் பொங்கலிட்டு கொண்டாட்டம்

வால்பாறை : வால்பாறையில் பல்வேறு இடங்களில் காணும் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் நடந்த விழாவில், போலீசார் பொங்கல் வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர்.தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில் தாசில்தார் வாசுதேவன் தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியில் காணும் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. சிந்தாமணி மேலாளர் அண்ணாதுரை தலைமையில் நடந்த விழாவில் ஊழியர்கள் பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக கொண்டாடினர். வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் நேற்று காணும் பொங்கல் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை