உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம சபை போல பாலர் சபை கூட்டம்; அன்னுாரில் முதல் முறையாக நடந்தது

கிராம சபை போல பாலர் சபை கூட்டம்; அன்னுாரில் முதல் முறையாக நடந்தது

அன்னுார்; கிராம சபை கூட்டம் போல பாலர் சபை கூட்டம் கோவையை அடுத்த அன்னுாரில் நேற்று முதன்முறையாக நடந்தது. தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஆண்டுக்கு ஆறுமுறை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அந்த ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவார்கள். இதே போல் பள்ளி மாணவர்களுக்கும் கிராம சபை கூட்டம் போல பாலர் சபை கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இதன்படி அன்னுாரில் முதல்முறையாக பாலர் சபை கூட்டம் நேற்று நடந்தது. அன்னுார் வட்டாரத்தில், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் நடந்த பாலர் சபை கூட்டத்தில் அந்த ஊராட்சியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை ஊராட்சி செயலர் மகாலட்சுமி துவக்கி வைத்தார். அப்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். வட்டார வள பயிற்றுனர் பானு, பாலர் சபை செயல்பாடுகள் குறித்து விளக்கினார். முடிவில் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் பற்றிய கோரிக்கை மனுவை ஊராட்சி செயலர் மகாலட்சுமியிடம் அளித்தனர். இதே போல கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதியில் பாலர் சபை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி