உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரசன்டேஷன் பள்ளியில்  நடந்த முப்பெரும் விழா

பிரசன்டேஷன் பள்ளியில்  நடந்த முப்பெரும் விழா

கோவை:மதுக்கரை பிரசன்டேஷன் கான்வென்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, விருது வழங்கும் விழா மற்றும் விளையாட்டு விழா என, முப்பெரும் விழா கோலாகலமாக நடந்தது. சிறப்பு விருந்தினராக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அப்துல் கயும், கிங்ஸ்டன் பிரபு, அஸ்வந்த் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மார்ச் பாஸ்ட், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டம் அளித்தல், ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் நிர்வாகி செலின் நிர்மலா, முதல்வர் லில்லி புளோரோ கிரேஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ