உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியின்றி வைக்கப்படும் தனியார் விளம்பர பலகைகள்

அனுமதியின்றி வைக்கப்படும் தனியார் விளம்பர பலகைகள்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், பொது இடங்களில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம், வர்த்தகம் என பல்வேறு வகைகளில் விளம்பர பதாகைகள், நிரந்தர விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இதுதவிர, சுற்றுப்பகுதி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகள், இடையூறாகவும் மாறி வருகின்றன.பெரிய அளவிலான தகரத்தாலான விளம்பர பலகைகளை, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் ரோட்டை ஒட்டியே நடப்படுகிறது. காற்று மற்றும் மழையின் தாக்கம் ஏற்பட்டால், அவை சரிந்து விழுந்து, வாகன ஓட்டுநர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.தற்போது, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு, விளம்பர பலகைகள் வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, அனுமதியின்றி ஆபத்தான முறையில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை கண்டறிந்து, அப்புறப்படுத்த துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் கூறுகையில், 'இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், விளம்பர பலகைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை