உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவில் கோர்ட் நீதிபதிகள் ஐந்து பேருக்கு பதவி உயர்வு

சிவில் கோர்ட் நீதிபதிகள் ஐந்து பேருக்கு பதவி உயர்வு

கோவை;கோவையில் பணியாற்றும், சிவில் கோர்ட் நீதிபதிகள் ஐந்து பேர், மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சிவில் கோர்ட்டில் பணியாற்றும், 130 சீனியர் சிவில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதி பதவி உயர்வு அளிக்க எழுத்து தேர்வு நடந்தது. இதில், 88 பேர் மாவட்ட நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கோவை வணிக நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன், கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி பி.கே.சிவகுமார், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி பி.கவுதமன், கோவை ஜூடிசியல் அகாடமி துணை இயக்குனர் ரிஷிரோஷன், கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி மோகனரம்யா, பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி மோகனவள்ளி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட நீதிபதிகளாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, வரும் 17ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை