உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் குழந்தைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி

உடுமலை : பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பு முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொறுப்பு தலைமையாசிரியர் முத்துக்குமாரசாமிமுன்னிலை வகித்தார்.குடிமங்கலம் ஒன்றியம் ஊர்நல அலுவலர் கலைச்செல்வி, மாணவர்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, விளக்கமளித்தார்.மாணவர்கள், பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குழந்தை திருமணங்களை தடுப்போம் என, உறுதிமொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை