உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., கோப்பை ஹேண்ட்பால் ; வீரர்கள் அபாரம் 

பி.எஸ்.ஜி., கோப்பை ஹேண்ட்பால் ; வீரர்கள் அபாரம் 

கோவை:பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கும், மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியின் சூப்பர் லீக் போட்டியில், வீரர்கள் சீறிப்பாய்ந்து கோல் அடித்தனர்.பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 16ம் ஆண்டு மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், 14 அணிகள் லீக் முறையில் போட்டியிட்டன. லீக் சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்த ஆறு அணிகள், சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் லீக் சுற்று போட்டி முடிவுகள்: முதல் போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 19 - 16 என்ற கோல் கணக்கில் கே.சி.டி., அணியையும், கிண்டி இன்ஜி., கல்லுாரி அணி 21 - 20 என்ற கோல் கணக்கில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியையும், ஸ்ரீ சக்தி கல்லுாரி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 20 - 16 என்ற கோல் கணக்கில், பி.எஸ்.ஜி., டெக் அலும்னி அணியையும், பி.எஸ்.ஜி., டெக் 24 - 19 என்ற கோல் கணக்கில், கலைஞர் கருணாநிதி அணியையும், பி.எஸ்.ஜி., டெக் அலும்னி அணி, 19 - 16 என்ற புள்ளிக்கணக்கில், குமரகுரு கல்லுாரியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை