உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் மீட்டர் இருப்பு இல்லை: பொதுமக்கள் தவிப்பு

மின் மீட்டர் இருப்பு இல்லை: பொதுமக்கள் தவிப்பு

பல்லடம்;'இருப்பு இல்லை' என மின்வாரியம் கைவிரிப்பதால், மின் மீட்டருக்காக காத்திருப்போர் அவதியுறுகின்றனர்.புதிய மின் மீட்டர் மற்றும் பழைய மீட்டருக்கு பதில் புதிய மின் மீட்டர் பொருத்துவதற்காக விண்ணப்பித்தவர்கள் மின் மீட்டர் கிடைக்காமல் தவிக்கின்றனர். வங்கி கடன் பெற்று புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள், மின் மீட்டர் கிடைக்காமல், வீடு கட்டியும் பயனின்றி, வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கி கடனையும் செலுத்தியபடி, வாடகை வீட்டுக்கான தொகையையும் செலுத்துவதால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமியை கேட்டதற்கு, 'ஆன்லைனில் விண்ணப்பித்து கோவை மண்டல அலுவலகம் மூலம் மின் மீட்டர் பெற்று வருகிறோம். தற்போது மின் மீட்டர் இருப்பில் இல்லை. மீட்டர் கிடைத்தால் தான் பணிகள் தடையின்றி தொடர முடியும்' என்றார். 'கடந்த ஆட்சிக்காலத்தில், மின் கம்பங்கள், தெரு விளக்கு, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் மண்டல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றதும் மின்வாரிய தேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் சென்னைக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆன்லைனில் ஒப்புதல் பெற்ற பின் அங்கிருந்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரித்து வழங்கப்படும். தற்போதும், இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுவதுடன், மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்ய முடிவதில்லை' என மின்வாரிய ஊழியர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை