உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜம்மாள் தேவதாஸ் நினைவு சொற்பொழிவு

ராஜம்மாள் தேவதாஸ் நினைவு சொற்பொழிவு

கோவை;அவிநாசிலிங்கம் பல்கலையின் முன்னாள் வேந்தர் ராஜம்மாள் தேவதாஸின் 22-ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. பல்கலை பதிவாளர் கவுரிராமகிருஷ்ணன் பேசுகையில், ''கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து வருங்கால தலைமுறையினரும் சிறந்த பெண்மணியாக வாழ, வழிகாட்டியவர் ராஜம்மாள் தேவதாஸ்,'' என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பல்கலை உணவு மற்றும் ஊட்டச்சத்து துறைத்தலைவர் பிரேமகுமாரி பேசுகையில், ''ராஜம்மாள், மகளிர் கல்விக்கான தன்னையே அர்ப்பணித்து, தன் உழைப்பினாலும், விவேகத்தாலும், தான் மேற்கொண்ட அனைத்து செயல்களிலும் சாதனை படைத்தவர். 530-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தேசிய ராணுவப் படையின் கவுரவப் படைத்தலைவராகவும் இருந்தார்,'' என்றார்.முனைவர் கவுசல்யா, துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், மனையியல் டீன் அம்சமணி மற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை