உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 11 ஆயிரம் வீடுகளுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ்

11 ஆயிரம் வீடுகளுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ்

மேட்டுப்பாளையம்;அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதற்காக நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் துணை தலைவர் விக்னேஷ் தலைமையில் பா.ஜ.,வினர் காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், அட்சதையை வழங்கினர். முன்னதாக கோவிலில் அழைப்பிதழ், அட்சதை பூஜை செய்யப்பட்டது.காரமடை நகர் பகுதியில் 11 ஆயிரம் வீடுகளுக்கு இந்த அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி