மேலும் செய்திகள்
ஊதியக்குழு அமைக்க அரசுக்கு வலியுறுத்தல்
01-Aug-2025
- - நமது நிருபர் -கோரிக்கைகள் குறித்து வரும் 24ம் தேதிக்குள் சங்கத்தை அழைத்துப் பேசி அறிவிக்க வேண்டும். இல்லையெனில் செப்., 12ம் தேதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறினர். இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயக்குழு அமைக்க வேண்டும்; அதில் கடை ஊழியர் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். கடைகளில் கார்டுகளுக்கு துல்லிய எடையில் பொருள் வழங்குவது போல், கடைகளுக்கும் சரியான எடையில் பொருள் வழங்க வேண்டும். வீடு தேடி ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதற்குப் பதிலாக, இயலாத கார்டுதாரருக்கு 'நாமினி' நியமித்து அவரது ஆதாரை பதிவு செய்து, பொருட்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை கோரிக்கை மனுவாக முதல்வர், துறை அமைச்சர், ெசயலர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு அளித்துள்ளோம். கோரிக்கைகள் குறித்து வரும் 24ம் தேதிக்குள் சங்கத்தை அழைத்துப் பேசி அறிவிக்க வேண்டும். இல்லையெனில் செப்., 12ம் தேதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
01-Aug-2025