பொங்கல் புத்தாண்டை வரவேற்று வண்ணக்கோலம் வரைந்த வாசகிகள்
கோவை: கோவையில் தினமலர்மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில், 'மார்கழிவிழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியர், இந்த கோலப் போட்டியில் பங்கேற்று புள்ளிக்கோலம், பூக்கோலம், மாக்கோலம் மற்றும் ரங்கோலி என, விதவிதமான கோலங்கள் போட்டு பரிசுகளை வென்று வருகின்றனர்.கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., மருத்துவமனை அருகில் உள்ள, ஹட்கோ காலனியில் நடந்த மார்கழி கோலப்போட்டியில், 38 பேர் பங்கேற்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பெரும்பாலும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ரங்கோலி கோலங்களிட்டிருந்தனர்.வாசகி சிவசங்கரி, உலக உருண்டை, சிவன், நந்தி, பறவைகள் என, அனைத்து உயினங்களையும் குறியீட்டாக வைத்து, ரங்கோலி வரைந்து அசத்தி இருந்தார்.பிரியதர்ஷினி, சரஸ்வதியின் குறியீடாக விணை, விஷ்ணு பகவானின் குறியீடாக, சங்கு வண்ண ரங்கோலி வரைந்து, அமர்க்களப்படுத்தி இருந்தார்.வாசகியர் கவுசல்யா, உமா இருவரும் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, இரண்டு பெரிய கோலமிட்டிருந்தனர்.வாசகி விஷ்ணுஸ்ரீ, தமிழ் உயிரெழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி, ஒரு அழகிய கோலத்தை வரைந்து இருந்தார். இந்த மார்கழி விழாக்கோலப் போட்டியை, எல்ஜி., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர், இணைந்து வழங்கினர்.
பரிசு பெற்றவர்கள்
புள்ளிக்கோலத்தில் வாசகியர் சுகப்பிரியா, எழிலரசி, மகேஸ்வரி ஆகியோர் பரிசு பெற்றனர். ரங்கோலியில் வாசகியர் உமா, மதுமிதா, வாணிஸ்ரீ ஆகியோர் பரிசு வென்றனர். வாசகியர் ஜீவரத்தினம், விஷ்ணுஸ்ரீ, சிவசங்கரி, ஆகியோரும் பரிசு பெற்றனர்.