உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாரதா மில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சாரதா மில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

போத்தனூர்:சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் சாலையில், மழைநீர் வடிகாலின் மேற்பகுதியில் ஆக்கிரமிப்புகள் காணப்பட்டன. இதனை நெடுஞ்சாலை துறையினர், மாநகராட்சியின் உதவியுடன் கடந்தாண்டு இருமுறை அகற்றினர். இருப்பினும் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. இதையடுத்து, மீண்டும் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி இன்ஜி., சுந்தர்ராஜன் மற்றும் நெடுஞ்சாலை ஆய்வாளர் மேற்பார்வையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இரு பெட்டிக்கடைகள், ஓட்டல்களின் முன் வைக்கப்பட்டிருந்த அடுப்பு, மளிகை, காய்கறி கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்த பலகைகள், தற்காலிக மேற்கூரைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்