உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க கோரிக்கை

 அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க கோரிக்கை

வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும் என, முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில், தற்போது, 473 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மேல்நிலைப்பள்ளியில் அனைத்து அரசு தேர்வு மற்றும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் விழாக்கள் நடக்கிறது. ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழாவும் இந்த பள்ளி வளாகத்தில் தான் நடக்கிறது. தேர்தல் நேரங்களில் ஓட்டுச்சாவடியாகவும் பள்ளி வகுப்பறை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பள்ளியின் பின் புறம் சுற்றுச்சுவர் இல்லாததாலும், புதர் மண்டிக்கிடப்பதாலும், இரவு நேரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இது தவிர, இரவு நேரத்தில் சிறுத்தையும் பள்ளி வளாகத்தினுள் செல்வதால், போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, மாணவியருக்கு போதிய கழிப்பிட வசதி இல்லை. பள்ளியின் பின்பக்கம் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்கள் அதிகளவில் படிக்கும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும். சுற்றிலும் உள்ள புதரை அகற்றி, வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ