உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டேட்டிங் செயலியை தடை செய்ய கோவை கலெக்டரிடம் கோரிக்கை

 டேட்டிங் செயலியை தடை செய்ய கோவை கலெக்டரிடம் கோரிக்கை

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். n பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் விவசாயி பாலசுப்பிரமணியம், ஆணிகள் பதித்த காலணியில் நடந்து வந்து கொடுத்த மனுவில், 'தென்னை, வாழை விவசாயம் மேற்கொள்ள வங்கிகளில் கடன் வாங்கினேன். வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் காரணங்களால், தென்னை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்தது. வாழை விவசாயம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. எனது வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது விவசாய நிலத்தை, வீட்டு மனையாக வகை மாற்றம் செய்து தர வேண்டும்' என கூறியுள்ளார். n கிணத்துக்கடவை சேர்ந்த மூத்த குடிமக்கள் அளித்த மனுவில், 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவில் மூத்த குடிமக்களுக்கான கேட்டட் கம்யூனிட்டியில் வீடுகள் வாங்கினோம். இங்கு சமையல் செய்ய முடியாத மூத்த குடிமக்களுக்கு, மெஸ் மூலம் கட்டண அடிப்படையில் உணவு வழங்கப்பட்டது. தற்போது வழங்கும் உணவு தரமற்றதாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர். n வி.சி.,கட்சி கலையரசன் தனது மனுவில், 'கடந்த சில ஆண்டாக வீடுகள் இல்லாத பட்டியலின மக்களுக்கு, வீட்டு மனை வழங்க கோரி மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க இல்லை. இது குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறியிருந்தார். n நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நர்மதா மற்றும் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா ஆகியோர் அளித்த மனுவில், 'கோவையில் டேட்டிங் செயலி மூலம் பழகிய மாணவியை போலீஸ் துறையை சேர்ந்த அதிகாரியின் மகன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது போன்ற டேட்டிங் செயலிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஆகவே தமிழக அரசு இதுபோன்ற டேட்டிங் செயலியை தடை செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை