உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்ப்பை மீறிய மதுக்கடை உடனே அகற்ற கோரிக்கை

எதிர்ப்பை மீறிய மதுக்கடை உடனே அகற்ற கோரிக்கை

கோவை;பி.என்.புதுாரில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்றுமாறு, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.மருதமலை ரோடு, பி.என்.புதுாரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கோவை மேற்கு மண்டலக்குழு சார்பில், சிறப்பு கருத்தரங்கு நடந்தது.இதில், இ.கம்யூ., மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ், மாவட்ட பொறுப்பாளர் சாந்தி, செயலாளர் பேபி ஆகியோர், மகளிர் ஆளுமை உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.தொடர்ந்து, 'பி.என்.புதுார் மக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மக்கள் நலனையும், பெண்களின் பாதுகாப்பு கருதியும், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.மாநில அரசின் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்க தகுதி இருந்தும், உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை, போர்க்கால நடவடிக்கையாக பரிசீலித்து, உரிமைத்தொகை வழங்க மாநில அரசு முன்வர வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை