மேலும் செய்திகள்
செயலர்கள் சந்திப்பு
02-Jul-2025
சூலுார்; தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு :ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணிவேராக உள்ள ஊராட்சி செயலாளர்களை, தமிழக அரசின் பணியாளர்களுக்கு பொருந்தும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பணியிடத்தின் முக்கியத்துவத்தை கருதி, ஊதிய குழு பரிந்துரையில் உள்ள, முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வருவது போல், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
02-Jul-2025