உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

வால்பாறை; வால்பாறை மா.கம்யூ., தாலுகா பொதுச்செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை, சோலையாறு அணை பகுதியை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களும் அத்தியாவசியப்பொருட்கள் வாங்க, சோலையாறு அணை பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடம் பராமரிக்கப்படாததால், சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இடதுகரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி சார்பில் செய்துதர வேண்டும். எஸ்டேட்களில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ