உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா தகவல் மையம் அமைக்க கோரிக்கை 

சுற்றுலா தகவல் மையம் அமைக்க கோரிக்கை 

வால்பாறை : வால்பாறை நகரில், சுற்றுலா தகவல் மையம் இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.வால்பாறை வரும், சுற்றுலா பயணியர் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள காட்சி முனை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.இதுதவிர, வால்பாறை நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணியர் அதிகளவில் கண்டு ரசிக்கின்றனர். இதுதவிர, எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானை, காட்டுமாடு, வரையாடு, சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், வால்பாறை நகரில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி