மேலும் செய்திகள்
பிடிபட்ட மலைப்பாம்பு காப்பு காட்டில் விடுவிப்பு
06-Oct-2024
ஆனைமலை: ஆனைமலை அருகே, ஆழியாறில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, நேற்று, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோட்டத்தில் ஒரு பகுதியில் உள்ள தென்னை ஓலையை அகற்றிய தொழிலாளர்கள், மலைபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தோட்டத்து உரிமையாளர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததார்.சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பினை மீட்டு, ஆழியாறு வனப்பகுதியில் விட்டனர்.
06-Oct-2024