உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு

 வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் ஆய்வு நடத்தினார். அப்போது, சங்கத்தின் தயாரிப்புகளான 'செழுமை' நாட்டு சர்க்கரை, 'பகலவன்' இட்லி பொடி, பருப்பு பொடி மற்றும் 'ஆழியார்' கடலை எண்ணெய், நல்லெண்ணை, தேங்காய் மற்றும் கொப்பரை ஏல விற்பனையை பார்வையிட்டார். தொடர்ந்து, கம்ப்யூட்டர் வாயிலாக விற்பனை மேற்கொள்ளவும், வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். சங்க வளாகத்தில் மேற்கொள்ளப்படும் திருமண மண்டப கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். அதன்பின், 'ஆழியார்' பச்சை பயிர் மற்றும் உருட்டு உளுந்து ஆகியவற்றின் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். உடன் கோவை மண்டல இணைப் பதிவாளர் அழகிரி, கோவை சரக துணைப் பதிவாளர் தினேஷ்குமார், பொள்ளாச்சி சரக துணைப் பதிவாளர் வடிவேல், துணைப்பதிவாளர்கள் அகல்யா, ஜீவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ