உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு கவுரவம்

மாணவர்களுக்கு கவுரவம்

தொண்டாமுத்தூர்:அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளையின் மாவட்ட செயற்குழு கூட்டம், பேரூரில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், அறக்கட்டளையின் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். துணை தலைவர் மாறன், துணைச் செயலாளர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்று, ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவ, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பில் கூடுதல் மாணவர்களை சேர்த்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புக்கு, தொடர்ந்து வருகைபுரிந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை