உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; ஊராட்சி தலைவர்கள் மனு

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; ஊராட்சி தலைவர்கள் மனு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்தில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய, தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்கம் சார்பில், பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.இதில், சொக்கனுார், குதிரையாலம்பாளையம், சிங்கையன்புதுார், அரசம்பாளையம், சொலவம்பாளையம் மற்றும் சில ஊராட்சிகளில், அதிகப்படியான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. வரும் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு தனியாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்