உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உடுமலை- தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பஸ் ஸ்டாண்டில் துவங்கி, முக்கிய ரோடுகள் வழியாக ஊர்வலம் சென்றது.இதில், சாலைப்பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.மடத்துக்குளம் உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவன் மற்றும் மடத்துக்குளம் போலீசார் பங்கேற்றனர்.* உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தில், பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாணவியர், சாலை விதிகளை பின்பற்றவும், முறையாக வாகன ஓட்ட வேண்டும் எனவும், தலைக்கவசம் அணிவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நகர வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.தொடர்ந்து பள்ளியின் முன், சாலைபாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகையை ஏந்தி பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை