| ADDED : ஜன 28, 2024 08:54 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் அதிகளவு வெளியேறுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு வழியாக, நாள்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாய் சேதம் அடைந்துள்ளது.பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இப்பகுதியில் மின் தடை ஏற்பட்டால் உபரி நீர் வெளியேறி கால்வாய் வழியாக செல்கிறது.புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் கால்வாய் இருப்பதால், வேகமாக வரும் தண்ணீர் கழிவு நீருடன் கலந்து சர்வீஸ் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் அவ்வழியில் செல்லும் பைக் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.கழிவு நீர் வெளியேற்றத்தால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் நடந்து செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.