உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ. 4.72 கோடியில் பணிகள் துவக்கம்

ரூ. 4.72 கோடியில் பணிகள் துவக்கம்

சூலுார்:சூலுார் பேரூராட்சி, திருச்சி ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வணிக வளாகம் கட்ட மூலதன மானிய திட்டத்தின் கீழ், 3 கோடியே, 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், பேரூராட்சி பொது நிதியில் கான்கிரீட் சாலை மறுசீரமைப்பு, வடிகால் புனரமைத்தல், தார் சாலை புதுப்பித்தல், சமுதாய நலக்கூடம் மேம்பாடு செய்தல் உள்ளிட்ட எட்டு பணிகளுக்கு, 82 லடசத்து, 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளை துவக்க பூமி பூஜை நேற்று நடந்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகா நாத் சிங், தலைவர் தேவி, துணைத்தலைவர் கணேஷ், செயல் அலுவலர் சதீஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி