உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமத்துவ பொங்கல் விழா: கோலாகலமாக கொண்டாட்டம்

சமத்துவ பொங்கல் விழா: கோலாகலமாக கொண்டாட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். பொள்ளாச்சி, ஆனைமலை தாசில்தார்கள் ஜெயசித்ரா, சிவக்குமார், சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அலுவலக வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு புதிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர்.மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன.முருகாளி எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் உதயன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் கலாராணி துவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி