மேலும் செய்திகள்
காரில் வந்து நகை திருடிய பெண் சிக்கினார்
08-Apr-2025
கோவை; நகைச்சுவையை, கண்ணியமான இடத்துக்கு கொண்டு செல்ல விதிகள், வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும் என, சம்ஸ்கார் பாரதியின் அகில பாரத பயிற்சி பட்டறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சம்ஸ்கார் பாரதியின், அகில பாரத பயிற்சி பட்டறை, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில், கடந்த 12 முதல் 14ம் தேதி வரை நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நம் நாட்டின் நாடக மரபு, உலகின் மிகப் பழமையானது; வளமானது. பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி பொதுக்கல்வி, மனஉறுதிக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் உள்ளது. ஒன்பது ரசங்களில், 'ஹாஸ்ய ரசம்' (நகைச்சுவை உணர்வு) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதன் நவீன வெளிப்பாடாக, 'ஸ்டாண்ட் -அப்' காமெடி வந்து, இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால், சமீபகாலமாக இதன் தரம் சரிந்துள்ளது. சமூக சீர்திருத்தத்துக்கான கருவியாக மாறாமல், குறுக்கு வழி புகழுக்காக மோசமான மொழி, மதம், சாதி, பாலின உணர்வு மற்றும் தேசிய மதிப்புகளை புறக்கணிக்கும் தளமாக மாறியுள்ளது. கருத்து சுதந்திரம் என, சிலர் மதநம்பிக்கைகள், தேசிய தலைவர்கள், சமூக பழக்கவழக்கங்களை கேலி, கிண்டல் செய்து பிரபலமடைகின்றனர்.இதுகுறித்து சம்ஸ்கார் பாரதியின், பிரபந்தகாரிணி கவலை தெரிவிக்கிறது. பாரத நகைச்சுவை மரபின் மேன்மையை நிலைநிறுத்த வேண்டும். நகைச்சுவையை, ஒரு கலை வடிவமாக சமநிலையில் வளர்ப்பது அவசியம் என கருதுகிறது.நகைச்சுவையின் கண்ணியம், நோக்கத்தைப் பாதுகாக்க, அனைத்து தரப்பினரின் பங்கை பிரபந்தகாரிணி கோருகிறது. நல்ல, கண்ணியமான நகைச்சுவையை, பார்வையாளர்கள் ஆதரிக்க வேண்டும். இத்துறையை வழிநடத்த பயிற்சி, தளங்கள், வளங்களை வழங்க, விதிகள், வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகளை ஏற்படுத்த வேண்டும். நகைச்சுவைக் கலையை ஊக்குவிக்க, சம்ஸ்கார் பாரதியுடன் தொடர்புடைய கலைஞர்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
08-Apr-2025