உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 மணி நேர வேலையை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்

12 மணி நேர வேலையை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்

திருமலையாம்பாளையம்: திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் 40க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். காலை 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை இவர்களது வேலை நேரம். கடந்த ஒரு மாதமாக காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, 12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டனர். வேலை பளு அதிகரித்ததால் உடல், மன ரீதியாக சோர்வடைந்தனர். வேலை நேரத்தை முன்புபோல் மாற்ற, செயல் அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. நேற்று காலை வேலைக்கு வந்த பணியாளர்கள், வேலையை புறக்கணித்து கவுன்சிலர்கள் ரமேஷ்குமார், சிலம்பரசன் ஆகியோருடன் பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி தலைவர் கவிதா பேச்சு நடத்தினார். இதில் வழக்கம்போல, காலை 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை வேலை செய்ய, தலைவர் கவிதா ஒப்புக் கொண்டார்; போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை