உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சன்மார்க்க சங்கம் விழிப்புணர்வு யாத்திரை

சன்மார்க்க சங்கம் விழிப்புணர்வு யாத்திரை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சமத்துார் சன்மார்க்க சங்கத்தின் சார்பில், வடலுார் செல்ல அருட்பெருஞ்ஜோதி ரதத்துடன் நேற்று யாத்திரை துவங்கியது.பொள்ளாச்சி, சமத்துார் சன்மார்க்க சங்கத்தினர் சார்பில், அருட்பெருஞ்ஜோதி ரதத்துடன் வடலுார் சத்தியஞான சபைக்கு ஜோதி தரிசன விழாவை காண, சிவராஜ் குழுவினர் சார்பில் பாதை யாத்திரை நேற்று துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த யாத்திரையில், சன்மார்க்க நெறி, உயிர் இரக்கம், அன்பு, கருணை போன்றவைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சன்மார்க்கத்தினர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை