மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
3 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
4 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
4 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
5 minutes ago
மேட்டுப்பாளையம்: -: சத்யசாய் பாபாவின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் திருவிளக்கு பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில், சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் திருவிளக்கு பூஜை நடத்தினர். காலை, 8:00 மணியிலிருந்து, 9:00 மணி வரை மெட்ரிக் பள்ளியிலும், 9:00 லிருந்து, 10:00 மணி வரை சி.பி.எஸ்.இ., பள்ளியிலும் திருவிளக்கு பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் என்.எஸ்.வி., விஜயா விளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இதில் பள்ளி முதல்வர்கள் அனுராதா, விஜயலட்சுமி, ஆசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலும், 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தன. இன்று காலை சமிதியின் சார்பில் ஆனந்தம் முதியோர் இல்லத்திலும், கல்லாறு அறிவொளி நகரிலும் பஜனையும், வஸ்திரதானம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள சத்யசாய் சேவா சமிதியில் இருந்து ஊர்வலம் துவங்குகிறது. மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைக்க உள்ளார். 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சத்யசாய் பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழா, கோ-ஆப்ரேடிவ் காலனி சமிதியிலும், அன்னபூரணிபேட்டை சமிதியிலும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் பகவான் சத்யசாய் சேவா சமிதிகளின் கன்வீனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago