உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சத்ய சாய்பாபாவின் ஜெயந்தி விழா துவக்கம்

 சத்ய சாய்பாபாவின் ஜெயந்தி விழா துவக்கம்

பெ.நா.பாளையம்: கணுவாய் அருகே உள்ள சோமையனூரில் சத்ய சாய்பாபாவின்,100வது ஜெயந்தி விழா துவங்கியது. தடாகம் ரோடு, சோமையனூர், திருவள்ளுவர் நகரில் உள்ள ஸ்வாகதம் சாய் மந்திர் கோவிலில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 100வது ஜெயந்தி விழாவையொட்டி ஒரு வாரம் பல்வேறு ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை மகா கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கணேஷ் குழுவினரின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண ஆரம்பம், பஜனை, பிரசாதம், ஆத்ம ராமாயணம் நாட்டிய நாடகம், மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று குரு கீர்த்தனைகள், சிவபூஜை, தியானங்கள், மீனாட்சி கல்யாணம், அம்பாள் அலங்காரம் ஆகியன நடந்தன. தொடர்ந்து இம்மாதம், 23ம் தேதி வரை வேத பாராயணம், பஜனை, ஆன்மீக சொற்பொழிவு, நவகிரக ஹோமம், பட்டிமன்றம், குழந்தைகள் வழங்கும் பன்முக கலை நிகழ்ச்சி, சாய் பஜன், வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ