உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளி மாணவி தற்கொலை ஆசிரியர்களிடம் விசாரணை

 பள்ளி மாணவி தற்கொலை ஆசிரியர்களிடம் விசாரணை

வால்பாறை:வால்பாறையில், அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை அரசு உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவி சஞ்சனா, 13, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, 'பள்ளியில் பணிபுரியும் மூன்று ஆசிரியர்கள், தன்னை சக மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசினர். ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்தம் காரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்' என வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், மாணவியின் தந்தை சக்திவேல் வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், 'என் மகள் இறப்புக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதன் படி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர், சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை